சென்னை: மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோவிலில்,அதிகார நந்தி சேவை உற்சவம்
ADDED :2800 days ago
சென்னை: மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோவில், பங்குனி மாத பெரு விழாவில் (மார்ச் 23), அதிகார நந்தி சேவை நடந்தது. மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள, காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில், எட்டாம் ஆண்டு பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, மார்ச், 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, அதிகார நந்தி சேவையில், உற்சவர் காசி விஸ்வநாதர், சர்வ அலங்காரத்துடன், அதிகார நந்தியில் எழுந்தருளி, மாடவீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதையடுத்து, பஞ்ச மூர்த்தி புறப்பாடு, நேற்று நடந்தது.மார்ச், 27ம் தேதி காலை, 4:30 மணிக்கு, தேர் திருவிழாவும்; 30ம் தேதி, நடராஜர் தரிசனம் தீர்த்தவாரியும் நடக்கிறது. ஏப்.,1ல், விடையாற்றி உற்சவம் நடக்கிறது.