உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கபாலீஸ்வரர் கோவில், பங்குனி உத்திர விழாவை ஒட்டி,மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்

சென்னை கபாலீஸ்வரர் கோவில், பங்குனி உத்திர விழாவை ஒட்டி,மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்

சென்னை : கபாலீஸ்வரர் கோவில், பங்குனி உத்திர விழாவை ஒட்டி, நேற்று முதல், 29ம் தேதி வரை, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

* ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலையில் இருந்து, லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச், பக்தவத்சலம், ஆர்.கே. மடம் சாலை வழியாக, மந்தவெளியை அடையலாம்
* அடையாறில் இருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள், ஆர்.கே.மடம், வி.கே.ஐயர், சிருங்கேரி மடம், வாரன் சாலை வழியாக, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை வழியாக செல்லலாம்
* மயிலாப்பூர் கோவில் குளம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம், லஸ் சர்ச் சாலையில், அமிர்தாஞ்சன் கம்பெனி அருகே, தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது

* அதிகார நந்தி விழா:

* அதிகார நந்தி திருவிழா நடக்க உள்ள, மார்ச், 24ம் தேதி காலை, 6:00 மணியில் இருந்து, நிகழ்ச்சி முடியும் வரையிலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்

அதே போல், தேர் திருவிழா நடக்க உள்ள, 28ம் தேதி காலை, 5:00 மணி முதல், நிகழ்ச்சி முடியும் வரையிலும்; அறுபத்து மூவர் திருவிழா நடக்க உள்ள, 29ல், மாலை, 3:00 மணி முதல், நிகழ்ச்சி முடியும் வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்

* வாகனங்களுக்கு தடை:

*தேர் மற்றும் அறுபத்து மூவர் திருவிழாக்கள் நடக்க உள்ள நாட்களில், சன்னதி தெரு, கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, வடக்கு மாட வீதி ஆகிய இடங்களில், எந்த வாகனங்களும் நிறுத்த தடை விதிக்கப்படுகிறது

* அதேபோல், கச்சேரி சாலையில் இருந்து, மத்தள நாராயணன் தெரு, சித்ர குளம் கீழ் தெருவில் இருந்து சித்ரகுளம் வடக்கு தெரு வரையிலும் வாகனங்கள் நிறுத்தக் கூடாது.

*நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு; ஆர்.கே.மடம் சாலையில் இருந்து, தெற்கு மாட தெரு; புனித மேரி சாலையில் இருந்து, ஆர்.கே.மடம் சாலை; தெற்கு மாட வீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை - வெங்கடேச அக்ரஹாரம் சாலை, லஸ் சந்திப்பு - ஆர்.கே.மடம் சாலை வரையிலும் வாகனங்கள் நிறுத்தக் கூடாது.

* வாகன நிறுத்தம்:

* கிழக்கு புறம் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச் சாலை யில் உள்ள, காமதேனு திருமண மண்டப வளாகத்தில் நிறுத்தலாம்

*கோவிலை சுற்றி மேற்கில் இருந்து செல்லும் வாகனங்கள், சாய்பாபா கோவில் அருகே வெங் கடேச அக்ரஹாரம், திருமயிலை ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் நிறுத்த லாம்

* காவல் துறை வாகனங்கள், சுந்தரேஸ்வரர் தெருவில், பி.எஸ்.சிவசாமி கலாலயா பள்ளி மற்றும் ஆர்.ஆர்.சபா அருகே வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !