ஆண்டிபட்டியில் வினைகள் தீர்க்கும் சக்தி விநாயகர் கோயில்
ஆண்டிபட்டி: வைகை அணை கட்டுமானப்பணியின் போது அதன் இடது கரையில் அமைக்க ப்பட்ட சக்தி விநாயகரை இப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். தீராத வினைகள். கவலை கள் நீங்க தேங்காய் மாலை அணிவிக்கின்றனர்.
வைகை அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகளை கடந்துள்ளது. கட்டுமானத்தின்போது அணைப் பகுதியில் இருந்த 10 க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டு, மாற்று இடம் ஒதுக்கித்தரப்பட்டது. அவ்வாறு சென்றபோது ஒரு கிராமத்தில் இருந்த விநா யகர் சிலையை அணையின் முன்பகுதியில் ஆற்றின் இடது கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
அணை மற்றும் பூங்கா கட்டுமானத்தின்போது விநாயகருக்கான கோயிலும் உருவானது.
இப்பகுதியைச்சேர்ந்த ஆர். பெருமாள் கூறியதாவது: அணை கட்டும் முன்பே இங்கு விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கட்டுமானபணிக்கு சென்ற தொழிலாளர்கள், அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என பலரும் இந்த விநாயகரை வணங்கி தினமும் தங்கள் பணிகளை துவக்கி வந்தனர்.
தற்போது பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் வணங்கி செல்கின்றனர். எருக்கம்பூ,
அருகம்புல் மாலை அணிவித்து வணங்கினாலும், தீராத கஷ்டங்கள், சுமைகள் நீங்க விநாயக ருக்கு தேங்காய் மாலை அணிவிக்கின்றனர். இங்கு வில்வமரம், நாகலிங்கப்பூ மரம், குடை மல்லிகைப்பூ மரம், இரவு ராணி பூச்செடி போன்றவை தனிச்சிறப்பாக உள்ளன, என்றார்.
கோயில் குறித்த தகவல் பெற: 90473 91448