உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி கோயில்களில் ராமநவமி சிறப்பு பூஜை

தேனி கோயில்களில் ராமநவமி சிறப்பு பூஜை

போடி : ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு, போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் ராமருக்கு பட்டாபிஷேகமும், தீபாராதனை நடந்தது. மோர், பானகரம், வடைகளுடன், பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. ராமர், லட்சுமணன், சீதை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதனை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமானோர் தரிசித்தனர். பெரியகுளம் : பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில்,சாய்பாபா ஜெயந்தி மற்றும் ஸ்ரீ ராமநவமி பூஜை நடந்தது. ஆரத்தி, கணபதி ேஹாமம், சுதர்சன ேஹாமம், விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா காட்சியளித்தார். சாவடி ஊர்வலம், ஆன்மிக கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை எம்எம்பி.டி., டிரஸ்டிக்கள், வர்த்தகபிரமுகர் முத்துமகேஷ்வரன், டாக்டர் முத்து விஜயன், பக்தர்கள் செய்தனர்.

* ராமநவமியை முன்னிட்டு, நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. காலை 6:00 மணி முதல் இரவு 8:00 வரை, அகண்ட ஹரே ராம நாமகீர்த்தனம், ராதே, கிருஷ்ணருக்கு திருமஞ்சனம், புஷ்ப அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் , பக்தர்கள் செய்திருந்தனர். தேனி அல்லிநகரம் ஆஞ்சநேயர், ஸ்ரீராம் நகர் ஆஞ்சநேயர், கணேச கந்த பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !