விருதுநகர் சீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா ஜெயந்தி விழா
ADDED :2796 days ago
விருதுநகர் : விருதுநகர்- சிவகாசி ரோடு மீசலுார் விலக்கில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா ஜெயந்திவிழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை கணபதி ஹோமம், சுதர்சனம், லெட்சுமி, மகாவிஷ்ணு, சீரடி சாய்பாபா ஹோமங்கள் நடைபெற்றது. காலை 9.30 முதல் 11 மணி வரை சாய்பாபாவின் பாதங்களுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை சாய்பாபா குறித்த சொற்பொழிவு நடைபெற்றது. அதை தொடர்ந்து 12:00 மணி, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.