உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி கோயில்களில் ராமநவமி விழா

பரமக்குடி கோயில்களில் ராமநவமி விழா

பரமக்குடி : பரமக்குடியில் உள்ள கோயில்களில் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பரமக்குடி அனுமார் கோதண்டரா மசாமி கோயிலில் ராமநவமி விழாவையொட்டி நேற்று காலைராமஜனனம், சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர் ராமர் பிறந்ததை நினைவு கூறும் விதமாக, பக்தர்களுக்கு நெல்மணிகள், நாணயங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலை அனுமன் வாகனத்தில் ராமர் வீதிவலம் வந்தார். *முன்னதாக இந்து அமைப்பினர் அயோத்தியில் ராமர் ஆலயம் அமைய வேண்டி பிரார்த்தனை செய்தனர். *பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் நடந்து வரும் பங்குனி விழாவையொட்டி நேற்று காலை அம்மன் கருட வாகனத்தில் ராமாவதாரத்தில் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

*பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சவுந்தரவல்லித் தாயாருக்கு ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது. தொடர்ந்து பெருமாள் அனுமன் வாகனத்தில் ராமாவதாரத்தில் அருள்பாலித்தார்.
*எமனேஸ்வரம் அனுமன் கோயிலில் சிறப்பு அபிேஷகம் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
*பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அபிேஷகம், லட்சார்ச்சனை நடத்தப்பட்டது.
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் லட்சுமணனர், பட்டாபிஷேக ராமர் சமேத சீதா,, ஆஞ்சனேயருக்கு ராமநவமி விழா நடந்தது. பக்தர்கள் சுந்தரகாண்டம் பாடினர். பெண்கள் நெய்விளக்கேற்றி ராமநாம சங்கீர்த்தனம், பஜனை உள்ளிட்டவைகளை செய்தனர்.
* சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேநயர் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வெண்ணை, வெற்றிலை அலங்காரத்தில் காணப்பட்டார். அனுமன் சாலீசா, சுந்தரகாண்டம், ராமாயண ஸ்தோத்திரப்பாடல்களை பக்தர்கள் பாடினர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !