ராஜபாளையம் கோயில்களில் ராமநவமி வழிபாடு
ராஜபாளையம் : விருதுநகர், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ராம நவமியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. விருதுநகர் ராமர்கோயிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. * ராஜபாளையம் ஆதி வழிவிடு விநாயகர் கோயிலில் அமைந்துள்ள அஷ்டவரத ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு ராமருக்கும் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிேஷகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தது. ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
* தேவதானம் அருகே மேற்குதொடர்ச்சி மலை சாஸ்தாகோவில் பகுதியில் அமைந்துள்ள ராம பக்த கல்லணை ஆஞ்சநேயர் கோயிலில் ராமருக்கும் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிேஷகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில்சுவாமிகள் காட்சியளித்தனர். மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முத்துச்சாமி செய்தார்.