ராமநவமி விழாவையொட்டி பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ராமநவமி விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி அருகே அனுப்பர்பாளையம் ஸ்ரீ பூமிநீளா சமேத மலைதாண்டிய பெருமாள் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு, நேற்று காலை, 6:30 மணிக்கு பெருமாளுக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சுயம்பு வீர ஆஞ்சநேயருக்கு, 16 வகையான அபிேஷகங்களும், ஆராதனைகளும்; காலை, 7:15 மணிக்கு மலைதாண்டிய பெருமாளின் உலகளந்த திருவடி பாதத்துக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் நடந்த விழாவில், கணபதி ேஹாமம், சுதர்சன ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம், சீதாராமர் மூலமந்திர ேஹாமம், ஆஞ்சநேயர், கருடாழ்வார் ேஹாமம், பூர்ணாஹுதி பூஜைகளும் நடைபெற்றன. காலை, 10:30 மணிக்கு திவ்யதரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் ததேவனந்த சரஸ்வதி சுவாமி, ஆனைமலை ஒன்றிய தர்மப்ரஸார் சமிதி உறுப்பினர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.