செங்காட்டில் ராம நவமி விழா
ADDED :2796 days ago
செங்காடு: செங்காடு, ஆஞ்சநேயர் கோவிலில், ராம நவமி விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்போரூர் அடுத்த, செங்காடு கிராமத்தில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும், ராம நவமி விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை, மூலவர் ராமனுக்கு சிறப்பு அபிஷேகம், அரச்சனைகள் நடைபெற்று, தீபாராதனைகள் காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்களும், கிராமவாசிகளும் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். அதே போல், கேளம்பாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலிலும், பாபா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.