மாரியம்மன் கோவில் திருவிழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
ADDED :2796 days ago
கிருஷ்ணராயபுரம்: பாப்பகாப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால்குடம் எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாப்பகாப்பட்டி மாரியம்மன் கோவிலில், பொங்கல் திருவிழாவையொட்டி கடந்த வாரம் பூச்சொரிதல் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து உர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். காலையிலிருந்து பல்வேறு சமூகத்தினர் பல குழுக்களாக பால் குடம் எடுத்து வந்தனர். நிகழ்ச்சியில், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.