ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி சிறப்பு பூஜை
ADDED :2796 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், ராம நவமி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அர்ச்சனை அபிஷேகம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில், மிகவும் பழமையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இதில், ஆண்டுதோறும் ராம நவமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. மாலையில் மகாதானபுரம் கமலானந்தர் நரசிம்மபாரதி பஜனை நடந்தது. பக்தர்களுக்கு நீர்மோர், பானகம், அன்னதானம், வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராம நவமி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.