ராகவேந்திரர் கோவிலில் ராம நவமி சிறப்பு பூஜை
ADDED :2796 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம ஆஞ்சநேய சமேத ராகவேந்திரர் கோவிலில், ராம நவமியை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. ராம நவமியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள, சீதாராம ஆஞ்சநேய சமேத, ராகவேந்திர சுவாமி கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு, கோபூஜை, கணேச பூஜை மற்றும் நவக்கிரஹ ஹோமம் நடந்தது. ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இன்று, மாலை, 7:00 மணிக்கு, பரத நாட்டிய நிகழ்ச்சியும், வரும், 31ல் சத்யநாராயண பூஜையுடன், சீதா திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,1ல், மாலை, 6:00 மணிக்கு, 108 குத்துவிளக்கு பூஜையும், ஏப்., 2ல், பகல், 12:00 மணிக்கு, ராமர் பட்டாபிஷேகமும் நடக்கிறது.