நாமக்கல் மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி
நாமக்கல்: மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில், குருத்தோலை ஞாயிறு பவனி சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல், திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில், குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை பிரான்சிஸ் தலைமை வகித்தார். குருத்தோலைகள் மந்திரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதையடுத்து, கிறிஸ்தவர்கள், குருத்தோலையை ஏந்திக் கொண்டு பவனி சென்றனர். நடராஜபுரம், சாலை, திருச்சி சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் ஆலயத்தை அடைந்தது. பவனியில், பங்கு மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வரும், 29, மாலை, 6:30 மணிக்கு ஆண்டவரின் இராவுணவு திருப்பலி, இரவு, 8:00 மணி முதல், நள்ளிரவு, 12:00 மணி வரை, நற்கருணை ஆராதனை நடக்கிறது. வரும், 30, காலை, 7:00 மணிக்கு, புனித வெள்ளி பெரிய சிலுவைப்பாதை நிகழ்ச்சி, காலை, 9:00 மணிக்கு ஆராதனை, மாலை, 6:15 மணிக்கு, திருச்சிலுவை ஆராதனை சடங்கு நடக்கிறது. 31ல், புனித சனியை முன்னிட்டு மாலை, 6:00 மணிக்கு, ஒப்புரவு அருட்சாதனம், இரவு, 11:30 மணிக்கு, பாஸ்கா திருவிழிப்புணர்வு சடங்குகள், ஒளி வழிபாடு, நற்கருணை வழிபாடும் நடக்கிறது. ஏப்., 1ல், இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு, ஆடம்பர ஈஸ்டர் பெருவிழா திருப்பலி சிறப்பாக நடக்கிறது. குருத்தோலை ஞாயிறு பவனி, மோகனூர் செல்வநாயகியம்மாள் ஆலயம், புதுத்தெரு புனித அந்தோணியார் ஆலயம், பேட்டப்பாளையம் புனித செசிலியம்மாள் ஆலயம், துத்திக்குளம் புனித அந்தோணியார் ஆலயம், ராசிபுரம், காக்காவேரி, திருச்செங்கோடு, ப.வேலூர் உள்பட மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் நடந்தது.