உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருத்தோலை சிறப்பு பிரார்த்தனை

குருத்தோலை சிறப்பு பிரார்த்தனை

விழுப்புரம்: விழுப்புரம் பழைய கோர்ட் சாலையில் உள்ள தமிழ் சுவிசேச லுத்தரன் திருச்சபையில் நேற்று காலை 6.00 மணிக்கு குருத்தோலை ஞாயிறு ஆராதனை நடைபெற்றது. இதில், பங்குதந்தை ஸ்டீபன் சுந்தர்சிங் பங்கேற்று, அருளுரை ஆற்றினார். முன்னதாக, கிறிஸ்துவ மக்கள் குருத்தோலைகளை ஏந்தி கொண்டு, விழுப்புரம் காந்தி சிலையில் இருந்து தேவாலயம் வரை ஓசானா பாடல்களை பாடி கொண்டு தலைமை போதகர் ரிச்சர்டு அன்புநாதன் தலைமையில் பவனி வந்தனர். இதே போல், துாய ஜேம்ஸ் ஆலயம், கிறிஸ்து அரசர் ஆலயம், புனித சவேரியார் தேவாலயங்களில் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !