குருத்தோலை ஞாயிறு: கிறிஸ்தவர்கள் ஊர்வலம்
ADDED :2795 days ago
தர்மபுரி: குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள், குருத்தோலையுடன், தர்மபுரி ஆர்.சி., சர்ச்சுக்கு, ஊர்வலமாக சென்றனர். கிறிஸ்தவர்கள் முக்கிய விழாக்களில் ஒன்றாக, குருத்தோலை ஞாயிறு உள்ளது. நேற்று நடந்த குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, 300க்கும் மேற்பட்ட, கிறிஸ்தவர்கள், தர்மபுரி - பென்னாகரம் சாலையில் இருந்து, திருப்பத்தூர் சாலையில், ஆர்.சி., சர்ச்சுக்கு, குருத்தோலைகளை ஏந்தியபடி, ஊர்வலமாக சென்றனர். அங்கு பங்குத்தந்தைஆரோக்கியசாமி தலைமையில், சிறப்பு பிராத்தனை நடந்தது.