உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் நாளை தேர் திருவிழா

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் நாளை தேர் திருவிழா

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நாளை, தேர் திருவிழா நடைபெறுகிறது. இதற்காக, தேர் அலங்கரிக்கும் பணிமும்முரமாக நடக்கிறது. காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. முன்னதாக, காலை, 10:00 மணிக்குள் சுவாமி புறப்பட்டு, 12:00 மணிக்குள் கோவிலை சென்றடைவார். நடப்பாண்டு, தாமதமாக புறப்படுவதால், நான்கு ராஜ வீதிகளில் மக்கள் கூட்டத்தை காண முடியவில்லை. வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில், நேற்று காலை, 11:30 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்டு, பகல், 2:30 மணிக்கு, சுவாமி கோவிலை சென்றடைந்தார். வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல், சுவாமியை தரிசிக்காமல், பக்தர்கள் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், நாளை தேர் திருவிழா நடைபெறுகிறது. இதற்காக, தேர் அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. இதற்காவது, குறிப்பிட்ட நேரத்தில் தேர் புறப்பட நடவடிக்கை எடுத்தால், தேர் திருவிழாவில் பங்கேற்ற பின், வேலைக்கு செல்ல, மக்களுக்கு வசதியாக இருக்கும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர் திருவிழாவிற்காக, பல்வேறு ஊர்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான சிவனடி யார்கள், காஞ்சிபுரம் வருவது வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !