உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி சிறப்பு பூஜை

பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி சிறப்பு பூஜை

சின்னாளபட்டி : மேலக்கோட்டை, அம்பாத்துரை ரோடு பக்த ஆஞ்சநேயர் கோயிலில், ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரவிய அபிேஷகத்துடன், வெண்ணெய் காப்பு, துளசி, வெற்றிலை மாலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. * அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், ராம நவமியை முன்னிட்டு மூலவர், உற்ஸவர் கோதண்டராமருக்கு விசேஷ அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. * செம்பட்டி கோதண்டராமர் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்கபெருமாள் கோயிலில், ராம நவமி விசேஷ அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.

நத்தம்: கோவில்பட்டியில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் ராமநவமி விழா நடந்தது. பாமாருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிேஷகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தாண்டிக்குடி: ராமர் கோயிலில் ராமநவமி விழா நடந்தது. சுவாமிக்கு அபிேஷக, ஆராதனை மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பஜன் மற்றும் விளக்குப் பூஜை நடந்தது. ராமநவமியை முன்னிட்டு சவும்யநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமேதனமாக காட்சியளித்தார்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !