பழநியில் 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருப்பு; ’‛ரோப்கார்’ சேவை பாதிப்பு
ADDED :2795 days ago
பழநி : ஞாயிறு விடுமுறை தினம், பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று ஞாயிறுவிடுமுறை தினம், பங்குனிஉத்திரவிழாவை முன்னிட்டு, வழக்கத்தை விட பழநிமுருகன்கோயிலுக்கு வெளியூர் பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் மலைகோயிலுக்கு சென்றனர். பலத்த காற்றுவீசியபோது ரோப்கார் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கினர். ஈரோடு, திருப்பூர், தாராபுரம், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தகாவடிகளுடன் குவிந்தனர். அவர்கள் தனிவரிசையில் சென்று மூலவருக்கு தீர்த்த அபிஷேகம் செய்தனர். இதனால் பொதுதரிசன வழியில் சென்ற பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர்.