பரமக்குடியில் குருத்தோலை விழா
பரமக்குடி : பரமக்குடியில் உள்ள சர்ச்களில் குருத்தோலை விழா, திருப்பலி நடந்தது. பரமக்குடி அருகே உலகநாதபுரம் குழந்தை ஏசு சர்ச்சில் பாதிரியார் சிங்கராயர் மற்றும் பங்குப் பணியாளர் ஜாலிமரிவளன் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது. அருட்சான்று நிலையம் துவங்கிய ஊர்வலம் சர்ச்சில் நிறைவடைந்தது. *பரமக்குடிஅலங்காரமாதா சர்ச் சார்பில் ஐந்து முனை அருகில் துவங்கிய ஊர்வலம் சர்ச்சில் முடிந்தது. பாதிரியார் செபஸ்தியான், எஸ்.எம்.எஸ்.எஸ்.எஸ். செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலிக்குப் பின்னர், ரத்ததானம் வழங்கும் விழா நடந்தது. முகாமில் அலங்காரமாதா பள்ளி முதல்வர் தனமேரி, பிரான்சிஸ் சேவியர், அலெக்ஸ் கலந்து கொண்டனர். மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் ஜிந்தா தலைமையில் ரத்த சேகரிப்பு பணிகள் நடந்தது. ஆசிரியர் ஐயப்பன் ஒருங்கிணைத்தார்.
திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது. முன்னதாக பாதிரியார் இலங்கேஸ்வரன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதன்பின் ஏராளமனோர் குருத்தோலை எந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். மாலையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஓரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது. தொண்டி அருகே காரங்காடு துாயசெங்கோல் மாதா ஆலயத்தில் குருத்தோலை பவனி நடந்தது. பாதிரியார் சாமிநாதன் தலைமையில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் வேர்க்கோடு தெரு புனித சூசையப்பர் சர்ச்சில், பாதிரியார் அந்தோணிச்சாமி நடந்திய சிறப்பு பூஜையில் இறைமக்கள் பலர் பங்கேற்றனர். மேலும் தங்கச்சிமடத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் ஊர்வலமாக வந்தனர். பின் தங்கச்சிமடம் தெரசம்மாள் சர்ச், குழந்தை ஏசு சர்ச்சில் பாதிரியார் ராஜஜெகன், சேசுராஜா சிறப்பு திருப்பலி பூஜை நடத்தினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.