பொள்ளாச்சியில் குருத்தோலை பவனி
ADDED :2866 days ago
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த வாரம் புனித வாரமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். புனித வெள்ளி மற்றும் புனித வாரத்தையொட்டி முதல் நிகழ்வான திருப்பாடுகளின் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவையொட்டி, பொள்ளாச்சி பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள், குருத்து ஓலைகள் ஏந்தியபடி பவனியாக தேவாலயத்திற்கு சென்றனர். அங்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.