தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்
ADDED :2860 days ago
இடைப்பாடி: கும்பாபி?ஷகத்தையொட்டி, தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. இடைப்பாடி, புளியம்பட்டியிலுள்ள விநாயகர், பெரியமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடக்கவுள்ளது. இதையொட்டி, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று, மூன்று குதிரைகளுடன், பூலாம்பட்டி காவிரியாற்றிலிருந்து, தீர்த்தக்குடங்கள் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக, கோவிலை அடைந்தனர். ஊர்முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.