உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ராமநாம ஜெபம்

வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ராமநாம ஜெபம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. சாதுக்கள், சான்றோர்கள், பக்தர்கள் பங்கேற்ற ஸ்ரீராமநாம ஜெபம் நடந்தது. யாகசாலைபூஜை முடிந்து உற்ஸவர்கள் ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் சாத்தப்படியானது.விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் மூன்று நாட்களாக லட்சார்ச்சனை நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !