திருப்பரங்குன்றத்தில் தயாராகும் தேர்
ADDED :2794 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 5ம் திருவிழாவாக இன்று (மார்ச் 26) இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளகைபாரம் நிகழ்ச்சி நடக்கிறது. கோயிலில் மார்ச் 21 துவங்கிய திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். ஏப்., 3 சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள கிரி வீதியில் தேரோட்டம் நடக்கும். அதற்காக கோயில் முன் நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைரத்தேரில் தயிர், எண்ணெய் மூலம் துாய்மைப் பணி துவங்கியது.தேர் உச்சிப்பகுதியில் கொடுங்கை அமைத்து, அலங்கார குடைத் துணிகள் பொருத்தப்படுகின்றன