கொட்டாம்பட்டி காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா
ADDED :2794 days ago
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டியில் வடக்குப்புற காளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா துவங்கியது. விழாவையொட்டி மார்ச் 18 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து வருகின்றனர். விழாவையொட்டி பால்குடம், பூத்தட்டு நிகழ்ச்சி நடந்தது. இன்று (மார்ச் 26) முளைப்பாரி ஊர்வலமும், நாளை (மார்ச் 27) முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பங்கேற்றனர்.