விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
புதுச்சேரி: புதுச்சேரி தன்வந்திரி நகர், ஜிப்மர் குடியிருப்பு வளாகம் சஞ்சீவி விநாயகர் கோவிலில், சஞ்சீவி விநாயகர் மற்றும் நுாதன பரிவார கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, நாளை (26ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி, இன்று (25ம் தேதி) காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, நாளை காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள், மூலமந்தர், மாலா மந்த்ர ஹோமம், உபசாரங்கள் தீபாராதனையும், காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு, 9:30 மணிக்குமேல் அனைத்து விமானங்களுக்கும் ஏக காலத்தில் கும்பாபிஷேகம் நடக்கிறது. சஞ்சீவி விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், சஞ்சீவி விநாயகர் சுவாமிக்கு மஹா அபிஷேகம் மற்றும் இரவு 7:00 மணிக்கு அனைத்து சுவாமிகள் வீதியுலா நடக்கிறது.