உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கைபாரம் நிகழ்ச்சி

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கைபாரம் நிகழ்ச்சி

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனி ஐந்தாம் நாள் திருவிழாவான கைபாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோயிலில் மார்ச் 21ல் திருவிழா துவங்கியது. தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். நேற்றிரவு 2 டன் எடைகொண்ட வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, தெய்வானையை, சீர்பாதங்கள், கிராமத்தினர், பக்தர்கள் உள்ளங்கைகளில் தலைக்குமேல் துாக்கி கொண்டு கொத்தாள முக்கு முதல் கோயில் வாசல் வரை ஓடினர். பின்பு பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 31ல் சூரசம்ஹாரம், ஏப்., 1ல் பட்டாபிஷேகம், ஏப்.,2ல் திருக்கல்யாணம், ஏப்.,3ல் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !