உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாக வாகனத்தில் பூதபுரீஸ்வரர் திருவீதி உலா

நாக வாகனத்தில் பூதபுரீஸ்வரர் திருவீதி உலா

ஸ்ரீபெரும்புதுார்: பூதபுரீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர விழாவில் நேற்று, நாக வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. ஸ்ரீபெரும்புதுாரில், பழமை வாய்ந்த சவுந்தரவள்ளி அம்பாள் சமேத பூதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், பங்குனி உத்திர பெருவிழா நடந்து வருகிறது. விழாவின், ஆறாம் நாளான நேற்று காலை, கேடயம், மாலை நாக வாகனத்தில் சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமானோர் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !