சென்னை மல்லீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா
ADDED :2861 days ago
சென்னை: மல்லீஸ்வரர் கோவில் பங்குனி மாத பெருவிழாவில், அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும், அம்பாளுடன் சுவாமி ரிஷப வாகன காட்சி அருளினார். சென்னை, லிங்கிச் செட்டி தெருவில் அமைந்துள்ளது, மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் கோவில். இக்கோவிலில், பங்கு மாத பெருவிழா, மார்ச் 22ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று இரவு, உற்சவர் மல்லிகேஸ்வரர் வெள்ளி ரிஷபத்திலும், அம்பாள் தங்க ரிஷபத்திலும், அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் காட்சி அளித்தனர். விழாவின் ஏழாம் நாளான நாளை, திருத்தேர் உற்சவம் நடக்கிறது.