மயிலம் முருகர் கோவிலில் 29ம் தேதி தேரோட்டம்
ADDED :2794 days ago
மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர விழாவையொட்டி வரும் 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. மயிலம் முருகர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்தது நேற்று முன்தினம் சுவாமி தங்க மயில் வாகனத்திலும், நாளை 28ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், மறுநாள் 29ம் தேதி காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 30ம் தேதி இரவு தெப்பல் உற்சவமும், 31ம் தேதி இரவு முததுப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.