உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்தீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா

அகத்தீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா

ஆர்.கே.பேட்டை: பொதட்டூர்பேட்டை, அகத்தீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர பெருவிழா நடைபெற உள்ளது. வரும் 30ம் தேதி, திருக்கல்யாண வைபவம் இடம் பெறும். பொதட்டூர்பேட்டை, அமிர்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில், ஏழாம் ஆண்டு, பங்குனி உத்திர பெருவிழா, நாளை துவங்குகிறது. 30ம் தேதி, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், தேவாரம் திருப்புகழ், சொற்பொழிவு என, பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. நாளை, காலை, 10:00 மணிக்கு, கொடியேற்றம் நடக்கிறது. அதை தொடர்ந்து, அப்பர் இறைப்பணி மன்றத்தினரின் தேவாரம் திருப்புகழ் ஓதப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு, பக்தி சொற்பொழிவு நடக்கிறது. மறுநாள் வியாழக்கிழமையும் சொற்பொழிவு, பக்தி கச்சேரிகள் காலை முதல், இரவு வரை நடக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை, பகல், 12:00 மணிக்கு, அகத்தீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, சாரதா நம்பி ஆரூரன் இசை பேருரை ஆற்றுகிறார். 7:30 மணிக்கு, எறிபத்த நாயனார் வழிபாட்டு மன்றத்தினரின் சிவ பூத கண வாத்தியங்கள் முழங்க, சுவாமி வீதியுலா எழுந்தருளுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !