கருப்பணசாமி கோயில் மண்டல பூஜை
ADDED :2793 days ago
வடமதுரை : வடமதுரை பேரூராட்சி சித்துாரில் பொய்கை கன்னிமார், கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரியில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக மண்டல பூஜை நடந்தது. சிறப்பு அபிஷேகம், பொங்கல் வைத்தல், திருமஞ்சனம், அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாட்டினை சித்துாரைச் சேர்ந்த கோயில் நிர்வாகிகள், தலைகட்டுதாரர்கள் செய்திருந்தனர்.