உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தந்தை சொல் தட்டாதே

தந்தை சொல் தட்டாதே

அயோத்தி மன்னர் தசரதர், மூத்த பிள்ளை ராமனுக்கு பட்டம் சூட்ட  முடிவெடுத்து, குலகுரு வசிஷ்டர், அமைச்சர்களிடமும் எண்ணத்தை தெரிவித்தார். அமைச்சர் சுமந்திரர் மூலமாக ராமனை அழைத்து, “மகனே! உனக்கு நாளையே பட்டம் சூட்டப் போகிறேன்,” என்றார்.  “தம்பிகள் பரதனும், சத்ருக்கனனும் தாத்தாவின் நாடான கேகய நாட்டிற்கு சென்றிருக்கும் நேரத்தில் பட்டம்  சூடி  கொள்ள ராமர் விரும்பாவிட்டாலும், தந்தையிடம் அதை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும்  சம்மதம் தெரிவித்தார். மறுநாள்  மகனை காட்டுக்கு போக சொன்னபோதும் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை இதன் மூலம் உலகிற்கு  உணர்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !