உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்களுக்கும் தெரியும்!

பெண்களுக்கும் தெரியும்!

பெண்களுக்கு முறையான கல்வி அளித்தால், அவர்கள் ஆண்களையும் மிஞ்சுவர் என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சி... கலீபா உமர் (ரலி), மஹர்(வரதட்சணை) உச்சவரம்பு சட்டத்தை வலியுறுத்தி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 400 திர்ஹத்தை விட கூடுதலாக மஹர் தரக்கூடாது என்று வாதிட்டார். அப்போது குரைசி குல பெண்மணி ஒருவர், “அமீருல் முஹ்மினீன் அவர்களே! நீங்கள் திருமறையின்(குர் ஆன்) அருள் வசனம் கேட்டதில்லையா?”  “என்ன வசனம்?” என உமர் கேட்டார்.

 “நீங்கள்  அவர்களுக்கு பொற்குவியலையே மஹராக கொடுத்திருந்தாலும்” (அல்குர்ஆன் 4:20) என்ற வசனம். ஆக, பொற்குவியலையே மஹராகத் தரலாம் என்று குர்ஆன் பெண்ணுரிமை பேசுகிற பொழுது, நீங்கள் எப்படி உச்சவரம்பு நிர்ணயிக்கலாம்?” உமருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது. மசோதாவில் தான் தெரிவித்த யோசனையை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அது மட்டுமல்ல, எல்லாரும் தன்னை விட மார்க்க ஞானமும், கல்வி அறிவும் உள்ளவர்கள் என்று உணர்ந்தார். “இந்த பெண் சரியாக சொன்னாள். ஆண் தவறிழைத்து விட்டான்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !