உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் ராமர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

விருதுநகர் ராமர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

விருதுநகர்: விருதுநகர் ராமர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் உற்சவர் ராமன், சீதை மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விருதுநகர் ரயில்வே ரோடு ராமர்கோயிலில் ராமநவமி பிரமோற்ஸவ விழா மார்ச் 16 ல் துவங்கியது.  விழாவில் நேற்று (மார்ச் 26ல்) மாலை 5:00 மணிக்கு சீதாராமர் திருக்கல்யாணம் நடைபெற்றது. ராமன், சீதை மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு ராமர், சீதையை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !