திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு
ADDED :2792 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குனி மாத பவுர்ணமி வரும், 30 இரவு, 7:31 மணி முதல், 31 மாலை, 6:30 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், கிரிவலம் வர உகந்த நேரம். மேலும், பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்கள் என தொடர்ந்து, நான்கு நாட்கள் வருவதால், 29 முதல் ஏப்., ௧ம் தேதி வரை பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். எனவே, நான்கு நாட்களும், அமர்வு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.