கருமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED :2793 days ago
கம்பம்: காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தில் உள்ள கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று காலை முல்லையாற்றில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலிற்கு அருகில்நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பொங்கல் வைக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.