மேலப்பாளையம் சப்த கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2793 days ago
சென்னிமலை: சென்னிமலை - ஊத்துக்குளி சாலையில், மேலப்பாளையம் விநாயகர், முருகன், ஸ்ரீசப்த கன்னிமார், ஸ்ரீகருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு திருப்பணி செய்து, ஆலய விமானம் அமைத்து, கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. கணபதி ?ஹாமம், பூஜைகள், புண்யாக வாஜனா உள்பட பல்வேறு பூஜை நடந்தது. விமான கலசம் பிரதிஷ்டை செய்து, யாக பூஜைகளை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னிமலை முருகன் கோவில் அர்ச்சகர் சம்பத்தகுருக்கள் தலைமையில், 10 சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.