உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டையில் பங்குனி முளைப்பாரி விழா

தேவகோட்டையில் பங்குனி முளைப்பாரி விழா

தேவகோட்டை: சாமியாடி பெரியகருப்பன் தெருவில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில்  பங்குனி முளைப்பாரி விழா நடந்தது. மார்ச் 20ந்தேதி காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது.  அம்மன் கரகம் எடுத்து வீதி உலா வந்து தீபாராதனை பூஜைகள் நடந்தன. 5ம் நாள் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவு நாளான நேற்று பால்குடம், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.  இரவு பூச்சொரிதல், முளைப்பாரி நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !