திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு
ADDED :2957 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி ஆறாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சிக்காக பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகினர்.நேற்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பரங்குன்றீஸ்வரர், ஆவுடைநாயகியும், மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பல்லக்கில் திருஞானசம்பந்தரும் 16கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர். அங்கு கோயில் ஓதுவாரால், சைவ சமயஸ்தாபித வரலாற்று லீலைக்கான பாடல்கள் பாடப்பட்டன. தீபாராதனை முடிந்து சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர்.