உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன்

வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன்

காளையார்கோவில்: பங்குனி திருவிழாவையொட்டி கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலுக்கு 50 பெண்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கொல்லங்குடியில் வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் பங்குனி சுவாதி பெருவிழா மார்ச் 24  ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.  தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடந்தது.

விழாவின் 5 ம் நாளான நேற்று மதுரை – தொண்டி ரோட்டில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து. காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு பாலாபிேஷகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், நடுமாடுகளுக்கான மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இரவில் காளியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.  விழாவையொட்டி பெரிய மாடுகள், சிறிய மாடுகளுக்கான மாட்டு வண்டி போட்டிகள் இன்று நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !