உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் நாளை இரவு சொர்க்க வாசல் திறப்பு!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் நாளை இரவு சொர்க்க வாசல் திறப்பு!

திருவட்டார்:திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பு விழா நாளை(5ம் தேதி) நடக்கிறது.தென்னிந்தியாவின் வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஆதிகேசவ பெருமாள் கோயில் திருவட்டாரில் அமைந்துள்ளது. இக்கோயிலை சுற்றி பரளியாறு வட்டமாக ஓடுவதால் இப்பகுதி திருவட்டாறு என்று அழைக்கப்படுகிறது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், 13 மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடக்கிறது. இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நாளை(5ம் தேதி) நடக்கிறது. விழாவில் காலை கணபதி ஹோமம், அபிஷேகம், முழுக்காப்பு, மதியம் அன்னதானம், மாலை மலர் முழுக்கு, அலங்கார தீபாராதனை, லட்சதீபம், இரவு 7 மணிக்கு சொர்க்க வாசல் வழியாக பகவான் கருட வாகனத்தில் எழுந்தருளல், சமயமாநாடு நடக்கிறது.மாநாட்டிற்கு ஸ்ரீஆதிகேசவ பக்தர் சங்க உறுப்பினர் தங்கப்பழம் தலைமை வகிக்கிறார். சங்க உறுப்பினர் நாராயணன் முன்னிலை வகிக்கிறார். நாகப்பன் வரவேற்கிறார். ராஜன், மணி பேசுகின்றனர். நாகர்கோவில் ஜோதிராம் சூரத் ஆசிரம தலைவர் பாலகிருஷ்ணன், வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் சிறப்புரையாற்றுகின்றனர். சங்க உறுப்பினர் ராஜேந்திரன் நன்றி கூறுகிறார். தொடர்ந்து பாலே, சினிமா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !