உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூரில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தேரோட்டம்

பேரூரில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தேரோட்டம்

பேரூர்:கோவை மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது.

பழமைவாய்ந்த இக்கோவிலில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் கடந்த, 26ல் துவங்கியது. வெள்ளியங்கிரி ஆண்டவர் மற்றும் மனோன்மணி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு, திருவீதியுலா நடந்தது.

அடுத்தடுத்த நாட்களில், மூலவர் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்; ( மார்ச் 29)ல் , இரவு, 7:00 மணிக்கு வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மையார் திருக்கல்யாண வைபோகம் நடந்தது. பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று 30ல் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு நடராஜர் அபிஷேகம் செய்யப்பட்டு தரிசன காட்சி நடைபெறுகிறது. மாலை, 4:30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !