நாமக்கல் நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாணம்
ADDED :2795 days ago
நாமக்கல்: நாமக்கல், நரசிம்ம சுவாமி கோவில் தேர்த்திருவிழா பங்குனி மாதம் கொண்டா டப்படுகிறது. இந்தாண்டு விழா, கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளு ம், சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நரசிம்மர் மற்றும் அரங்கநாதருக்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பட்டாச்சாரியார்கள் திருமணம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து, பக்தர்கள் சுவாமிக்கு மொய் சமர்ப்பித்தல் நடந்தது. நாளை (மார்ச் 31) காலை, 10:35 மணிக்கு மேல், நரசிம்மசாமி கோவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, மாலை, 4.30 மணிக்கு அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.