திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மொபைல் கழிவறை வசதி
ADDED :2796 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், மொபைல் கழிவறை வசதி செய்யப்பட் டுள்ளது. திருவண்ணமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று, அண்ணாமலையாரை தரிசிக்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக, மூன்று மொபைல் கழிவறைகள், கோவிலின் ஐந்தாவது பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதை, கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன், பார்வையிட்டார். கும்பகோணம் உப்பிலியப்பன் கோவிலில் இருந்து, கழிவறை கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. இன்று 30 ல்முதல், பக்தர்களின் பயன்பாட்டிற்கு விடப்படும்.