உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுப்பழனியில் இன்று (மார்ச் 30) பங்குனி உத்திர விழா

நடுப்பழனியில் இன்று (மார்ச் 30) பங்குனி உத்திர விழா

அச்சிறுப்பாக்கம் : பெருங்கருணையில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா, இன்று (மார்ச் 30) நடைபெறுகிறது.

அச்சிறுப்பாக்கம் அடுத்த, பெருங்கருணையில் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. நடுப்பழனி என அழைக்கப்படும் இத்தலத்தில், பங்குனி உத்திர விழா இன்று (மார்ச் 30) நடைபெறுகிறது.

பக்தர்கள், பல வகையான காவடிகளை சுமந்து வந்து, நேர்த்திக் கடனை செலுத்துவர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர் என்பதால், நான்கு காவல் ஆய்வாளர்கள் தலைமையில், போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சமீபத்தில், இக்கோவிலில், 45 அடி உயரமுள்ள பிரம்மாண்ட முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !