உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவில் வளாகத்தில் குப்பை

காஞ்சிபுரம் ஏகாம்பரர் கோவில் வளாகத்தில் குப்பை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவில் வளாகத்தில், தேங்கியுள்ள குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, பக்தர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, 21ல், கொடியே ற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலையில், பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த் திகளுடன், ஏகாம்பரநாதர் வீதியுலா வருகிறார்.மேலும், 31ம் தேதி அதிகாலை, பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள் ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக, கோவில் வளாகத்தில், கூடாரம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொபைல் டாய்லெட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நொறுக்கு தீனிக்காக, பானிபூரி, பேல்பூரி போன்ற வடஇந்திய சாட் வகை கடைகளும், வடை, பஜ்ஜி, போண்டா, காலி பிளவர் பக்கோடா, ஐஸ் கிரீம், டெல்லி அப்பளம், ஸ்நாக்ஸ் வகை என, தற்காலிக ஸ்டால்களும் போடப்பட்டுஉள்ளன. இக்கடைகளில் பொருட்களை வாங்கி சாப்பிட்டு, கீழே வீசப்படும் பேப்பர் பிளேட்டுகள், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகூல் கப்புகள், கேரி பேக்குகள் போன்றவற்றை முறையாக அகற்றாததால், கோவில் வளாகத்தில் ஆங்காங்கே, குப்பை தேங்கி கிடக்கிறது.

கோவில் வளாகத்தில் தின்பண்ட கடைகள் முளைத்துள்ள நிலையில், தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.கோவில் வளாகத்திற்குள் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை முறையாக அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !