உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சுழி கோயிலில் திருமேனிநாதர் கோயில் பங்குனி தேரோட்டம்

திருச்சுழி கோயிலில் திருமேனிநாதர் கோயில் பங்குனி தேரோட்டம்

நரிக்குடி:திருச்சுழி துணைமாலையம்மன் சமேத திருமேனிநாதர் கோயில் பங்குனி தேரோட் டத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இக்கோயில் பங்குனி விழா கடந்த 20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் மற்றும் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளி த்தனர்.

நேற்று முன்தினம் (மார்ச் 28)ல்துணைமாலையம்மனுக்கும் திருமேனிநாதருக்கும் திருக்கல் யாணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.

அம்மன் பச்சைபட்டுடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருத்தேர் வடம் பிடித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ராஜராஜன் எஸ்.பி., தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !