உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி சிலை மோசடி வழக்கு விழாவுக்கு பின் மீண்டும் விசாரணை

பழநி சிலை மோசடி வழக்கு விழாவுக்கு பின் மீண்டும் விசாரணை

பழநி : பழநி முருகன் கோவில் ஐம்பொன்சிலை தொடர்பாக, பங்குனி உத்திரவிழா முடிந்த பின் மீண்டும் விசாரணையை துவங்க உள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலு க்கு, 2004ல், ஐம்பொன் சிலை செய்ததில், தங்கம் மோசடி செய்ததாக, நிர்வாக அதிகாரி, கே.கே.ராஜா, ஸ்தபதி முத்தையாவை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்மாணிக் கவேல் கைது செய்துள்ளார்.மேலும், நவபாஷாண சிலையை வெளிநாட்டிற்கு கடத்துவதற்கு முயற்சி நடந்துள்ளதா எனவும், போலீசார் விசாரிக்கின்றனர்.ஐம்பொன் சிலை தயாரிப்பு குழுவில், 2004ம் ஆண்டு இடம்பெற்றிருந்தவர்கள், சிலையின் எடை, செலவு விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் குறித்து, இணை ஆணையர் செல்வராஜிடம், மார்ச் ௨௮ல், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இணை ஆணையர் செல்வராஜ், மேலாளர் உமா உள்ளிட்ட அதிகாரிகள், கோவில் அலுவலர்களிடம், நேற்று(மார்ச் 29)ல் முன் தினம், காலை முதல் இரவு வரை, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் விசாரணை நடத்தினார்.பழநியில் கைப்பற்றிய ஆவணங்களுடன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று (மார்ச் 30)ல் புறப்பட்டுசென்றனர்.இது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதா வது:பழநியில் இரு நாட்களாக, ஐம்பொன் சிலை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்துள்ளோம். பங்குனி உத்திரவிழா நடப்பதால், விசாரணையை ஒத்திவைத்துள் ளோம். கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில், சிறையில் உள்ள ராஜாவை, காவலில் எடுத்து விசாரிப்போம். 2004ல், பழநி கோவிலில் பணிபுரிந்த அதிகாரிகள், அலுவலர்கள் சிலரி டம் விசாரிக்க வேண்டியுள்ளது.அடுத்தவாரம் மீண்டும் பழநியில் விசாரணையை தொடரத் திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !