உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு முருகன் கோவிலில் கோலாகலம்

திருப்பூரில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு முருகன் கோவிலில் கோலாகலம்

திருப்பூர்: பங்குனி உத்திரத்தையொட்டி, கல்யாண சுப்ர மணியர், திருவீதியுலா சென்று பக்த ர்களுக்கு அருள்பாலித்தார்.தமிழ் மாதங்களில், 12வது மாதமாக உள்ள பங்குனியில், 12வது நட்சத்திரமாக உள்ள உத்திர நட்சத்திரத்தன்று, பன்னிருகை வேலவனுக்கு சிறப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி, நேற்று உத்திர நட்சத்திரம் என்பதால், முருகன் கோவி ல்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.


திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவிலில், மூலவருக்கு அபிஷே கம், சிறப்பு அலங்கார, தீபாராதனையும் நடந்தது. தேவியருடன் கந்தப்பெருமான், கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாலிபாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணியர் கோவிலில், காலை, 10:00 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அலங்கார பூஜையும், தீபாரா தனையும், சுவாமி திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள சண்முக சுப்ரமணியருக்கு நேற்று(மார்ச் 30)ல் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பண்டிகை நாளான நேற்று, (மார்ச் 30)ல் மின்கம்பங்களை மாற்றும் பணி நடந்ததால், கோவிலுக்கு அருகே செல்ல முடியாதபடி, அனைத்து வீதிகளும் அடைக்கப்ப ட்டிருந்தன. இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !