உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசியில் திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்

சிவகாசியில் திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்

சிவகாசி:108 திவ்யதேசங்களில் ஒன்றானதிருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. முத்து பட்டர் தலைமையில் அனந்தசைனன் பட்டர் பூஜைகள் செய்தார்.

திருக்கல்யாணத்தையொட்டி நாரணாபுரத்தைபூர்விக ஊராக கொண்ட செங்கமலத்தாயார், அதிகாலை 5.30 மணிக்கு கோயிலில் எழுந்தருளினார்.

மதியம் 12.30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பெருமாள், செங்கமலத்தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. தக்கார் சுந்தராஜூ, செயல் அலுவலர் சுமதி, முன்னாள் எம்.எல்.ஏ., பாலகங்காதரன் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !